shadow

சிறு சிறு தீவுகளாக மாறிய கேரளா! வெள்ள மீட்புப்பணிகள் தீவிரம்

தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக வெள்ளக்காடாக மாறி கேரள மாநிலம் தனித் தீவுகளாக மாறி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் கேரளாவின் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது.

இதனால் திறந்துவிடப்பட்ட நீரால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக கேரள மாநிலம் தனித் தனித் தீவுகள் போன்று காணப்படுகிறது.

கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply