சியோமி ஸ்மார்ட் டிவி விலை திடீர் குறைப்பு

சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4 ப்ரோ 55-இன்ச் 4K ஹெச்.டி.ஆர். ஸ்மார்ட் டி.வி. மாடலின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டி.வி. ரூ.49,999 விலையில் ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடலின் விலை குறைப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது 4K ரக புதிய தொலைகாட்சி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனவரி மாதத்தில் சியோமி தனது Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ 32 இன்ச், Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 இன்ச், Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை சியோமி குறைத்தது. ஜனவரியில் தொலைகாட்சிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் டி.வி. விலையை குறைப்பதாக சியோமி தெரிவித்தது.

விலை குறைப்பை தொடர்ந்து சியோமி Mi எல்.இ.டி. 4 ப்ரோ 55 இன்ச் மாடல் ரூ.47,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயனர்கள் ப்ளிப்கார்ட், அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் வாங்கலாம்

Leave a Reply