சியோமியின் 5ஜி போன் அறிமுகம் எப்போது?

சீனாவின் முன்னணி நிறுவனமான சியோமி, இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கையில் வைத்திருக்கும் நிலையில் தற்போது விரைவில் 5ஜி மொபைலை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சியோமி நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார். லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.

அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *