சிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம், மற்றும் வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேகா ஆகாஷ் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர். இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *