சிம்புவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகி!

சிம்புவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகி!

சிவகார்த்திகேயன் – மித்ரன் இணையும் படத்தின் நாயகியாக இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஓப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘மாநாடு. இந்த படம் குறித்து இடையில் சர்ச்சைக்குரிய செய்திகள் வந்தாலும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தற்போது சிம்பு தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.