சிம்புதேவன் – வெங்கட்பிரபு இணையும் படத்தில் 6 ஹீரோ 6 ஹீரோயின்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் டிரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தை சிம்புதேவன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘புலி’, வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் ஆறு கதை, ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள், , ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்திற்கு ‘கசடதபற’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply