சினிமாவுக்கு வருகிறார் விஜய் டிவி புகழ் ராமர்

விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், மா.கா.பா உள்பட பலர் சினிமாவுக்கு வந்து புகழ் பெற்றுள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ராமர் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

அர்சல் ஆறுமுகம் என்பவர் இயக்கவுள்ள ‘ஏகநாதன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ராமர் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விவாந்த் மற்றும் நீரஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு பூபதி ஒளிப்பதிவும், கணேஷ் இசையமைக்கவும் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *