shadow

சிந்துநதி விஷயத்தில் சீனாவின் உதவியை மறுத்த பாகிஸ்தான்

சிந்து நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்ட சீனாவின் நிதி உதவியை முதலில் ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் தற்போது நிராகரித்துள்ளது. சீனாவின் ஒரு மண்டலம்; ஒரே பாதை என்ற பொருளாதார வழித்தடத் திட்டத்தில் இணைந்து செயல்பட பாகிஸ்தான் ஒத்துக்கொண்டது. சிந்து நதியின் குறுக்கே ((Diamer Basha)) டயாமெர் பாஷா என்ற பிரம்மாண்ட அணை கட்டவும் பாகிஸ்தான் திட்டமிட்டது.

இதற்கு இந்திய மதிப்பில் 91 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக சீனா உறுதியளித்தது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வழித்தடத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், சொந்த நிதியில் அணைகட்ட விரும்புவதாகவும் பாகிஸ்தான் சீனாவிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சீனா வழங்க முன்வந்த நிதி உதவியை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply