சித்து தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி பரிசு: இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநில முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து , பிரதமர் மோடியையும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடியை திருடர் என்று சித்து குறிப்பிட்டார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி அல்ல… அவர் ஒரு போகி என்று சித்து கூறினார்

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இயங்கும் “இந்து யுவ வாகினி” எனும் இந்து அமைப்பு சித்துவுக்கு எதிராக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *