shadow

சித்தராமையாதான் முதல்வரா? ராஜினாமா செய்ய போவதாக குமாரசாமி மிரட்டல்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசை ஒருபக்கம் பாஜக கவிழ்க்க முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையாதான் முதல்வர் என்று கூறி வருகின்றனர்

இந்த நிலையில் காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையாதான் முதல்வர் என்று கூறி வருவதாகவும், இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எல்லை மீறி நடந்து வருவதாகவும், இதே ரீதியில் சென்றால் தனக்கும் பதிலடி கொடுக்க தெரியும் என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply