சாந்தனு நடிக்கவிருந்த படத்தில் உதயநிதி: மிஷ்கின் ஹீரோவை மாற்றியது ஏன்?

பிரபல இயக்குனர்கள் பிரியதர்‌ஷன், சீனு ராமசாமி ஆகியோர்கள் இயக்கத்தில் நடித்த உதயநிதி தற்போது இன்னொரு பிரபல நடிகரான மிஷ்கின் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தப் படத்தில் விஷால் தன் மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முன்னதாக கே.பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது அதே கதையில் உதயநிதி நடிப்பதோடு அவரே இந்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *