shadow

பரபரப்பு தகவல்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் வழக்கில் நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் நேற்று முதல் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களையும் கைது செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் மரணம் வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமன்றி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அல்லது இன்று இரவுக்குள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட அனைவரையும் கைது செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *