சாதி பாகுபாடு எந்த பள்ளியில் என ஸ்டாலின் சொல்வாரா?

கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் ஒரு கேள்வித்தாள் வைரலாகி வருகிறது. அதில் தலித் குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று உள்ளது. இந்த கேள்விக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

உண்மையில் இந்த கேள்வித்தாள் கேந்தரிய வித்யாலயாவின் எந்த பள்ளியின் கேள்வித்தாளும் இல்லை என்று கேந்தரிய வித்யாலயா பதிலளித்துள்ளது. இந்த கேள்வித்தாளில் பள்ளியின் பெயரே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது எந்த பள்ளி என்பதை கண்டுபிடித்துவிட்டு அதன் பின்னர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாரோ ஒரு சமூக விரோதி வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வித்தாளை உருவாக்கி இணையத்தில் வைரலாக்கியிருக்கலாம் என்றும் அதை உண்மை என நம்பி முக ஸ்டாலின் போன்ற பொறுப்பான தலைவர்கள் செயல்பட கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply