shadow

சவுதி அரேபியா பெண்களுக்கு மேலும் ஒரு சலுகை: மன்னர் முடிவு

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளார்.

கடற்கரை ஓட்டலில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், கார் ஓட்டவும் மன்னர் சல்மான் சமீபத்தில் அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது பெண்கள் விளையாட்டு மைதானத்திற்குள் நுழையவும் அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ரியாத், தம்மான், ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் வரும் 2018 முதல் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *