shadow

சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை சமீபத்தில் நீங்கியதை அடுத்து அங்கு ஏராளமான பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரும் லைசென்ஸ் பெற்றுள்ளார். இவர்தான் சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு பெற்ற முதல் இந்திய பெண்ணின் பெயர் சாரம்மா தாமஸ் என்பது ஆகும். இவர் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

Leave a Reply