அதிர்ச்சித் தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் சலூன் கடைகள் திறக்க அம்மாநில அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது சலூன் கடைகள் திறந்தும் அரசும் நிபந்தனைகளின் படி செயல்பட வேண்டியது இருப்பதால் அதிக செலவு ஆவதாக சலூன் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

டிஸ்போசல் கவர், சானிடைசர் உள்பட பல பொருட்களை வாங்குவதற்காக செலவு அதிகமாகவும் அந்த செலவுகளை வாடிக்கையாளர்களிடம் கேட்டு வாங்க வேண்டி இருப்பதாகவும் ஆனால் வாடிக்கையாளர் அதனை தர மறுப்பதாகவும் சலூன் கடைக்காரர் கூறியுள்ளனர்

முடி வெட்டுவதற்கு என்றே கிட்டத்தட்ட 200 முதல் 500 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடை பக்கமே வருவதில்லை என்றும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தாங்களாகவே முடிவு ஏற்றுக் கொள்வதாகவும் இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெலுங்கானா சலூன் கடை காரர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply