சற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்

நடிகை கஸ்தூரி சற்றுமுன்னர் தனது டுவிட்டர் தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் ஜாதிக்காக சண்டை போட்டு நேரத்தை, உணர்ச்சிகளை வீணடிக்க வேண்டாம். இப்போது தண்ணீர் பிரச்னை நிலவுகிறது..அதற்காகதான் நாம் சண்டை போட வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் டுவிட்டரில் என்னதான் நல்ல கருத்தை தெரிவித்திருந்தாலும் அதை கிண்டல் செய்ய ஒருசிலர் இருப்பதுபோல் இந்த டுவீட்டுக்கும் ஒருசிலர் தரக்குறைவான கமெண்ட்டுக்களை பதிவு செய்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கஸ்தூரி இன்னொரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘அது என்னவோ தெரியலை. தரக்குறைவான தனிமனித தாக்குதல்களை அடுக்கும் கனவான்கள் 100க்கு 90 பேர் பகுத்தறிவு/சுயமரியாதை க்ரூப்பாவே இருக்கிறார்கள்…  என்ன செய்ய, முன் ஏறு போகும் வழியில்தானே பின்னேறு போகும். தலைவனுக்கு சற்றும் சளைக்காத திதிசொ க்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *