சர்ச்சைக்குள்ளான ப்ரியங்கா சோப்ராவின் ஆடை

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியாக உடை அணிவதில் அதிக ஆர்வம் செலுத்தி நிலையில் சமீபத்தில் முன் அழகை வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் இவர் அணிந்த ஆடை ஒன்று கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவுக்கு வருகை தந்த பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கிட்டத்தட்ட முன்னழகை முழுவதையும் காட்டும் விதமாக அரைகுறை ஆடை அணிந்து வந்திருந்தார். மறைக்க வேண்டிய பகுதிகள் வெட்டப்பட்டு கிழிசல் போல அந்த ஆடைவடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் உடையை சீக்கிரம் தரும் படி தையல்காரரை அவசரப்படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்று விமர்சனம் செய்துள்ளனர். இணைய தளங்களில் அந்த உடையை வைத்து கேலி சித்திரங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர். ‘மீம்ஸ்’ போட்டு கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

காற்றோட்டம் தேவை என்றால் அதற்கு இப்படியா? வீட்டில் சுதந்திரமாக இருக்கலாமே? என்று விதம் விதமாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இது போல், ஏற்கனவே பலமுறை பரியங்கா சோப்ரா ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். என்றாலும், அவர் அதை கண்டு கொள்வது இல்லை. தொடர்ந்து இதே போன்ற் ஆடையைத்தான் அவர் அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *