சர்கார் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்: தினகரன்

‘சர்கார்’ படத்தின் பிரச்சனையை பூதாகரமாக்கி அந்த படத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது, பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறிய தினகரன், * போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளாஅர்.

மேலும் மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், சர்கார் திரைப்படம் நடுநிலையுடன் எடுக்கவில்லை என்றும் இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *