சர்கார் விவகாரம்: பா.ரஞ்சித் கடும் கண்டனம்

சர்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினர் தெரிவித்த எதிர்ப்பை படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவினர் பயன்படுத்த நினைத்தனர். ஆனால் மெர்சல் படத்தின் ரிலீசின்போது பாஜகவினர் போல் டுவிட்டரில் மட்டும் போராடாமல் அதிமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி ‘சர்கார்’ திரையிடப்பட்ட தியேட்டர்களை முற்றுகையிட்டு பேனர்களை கிழித்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் தற்போது கமல், ரஜினி, விஷால் உள்பட திரையுலகினர்களும் ஒருசில அரசியல் தலைவர்களும் சர்கார் படக்குழுவினர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, ‘சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெறிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து இழந்து போய்விட்டது என்று!!! என்று கூறியுள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *