shadow

‘சர்கார் வசூல் தகவல் உண்மையா?

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்னும், ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பெய்டு டிராக்கர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இதுவரை இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் ஒருவர் கூட இந்த படம் தங்களுக்கு லாபத்தை கொடுத்ததாக பேட்டியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply