‘சர்கார்’ படத்தில் மீண்டும் இணையும் ‘மெர்சல்’ மேஜிக் குழு

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் மீண்டும் ‘மெர்சல்’ படத்தின் மேஜிக் குழு இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சர்கார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியை பிரமாண்டமாக இதுவரை தமிழ்ப்படத்தில் காணாத லொகேஷனில் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த பாடல் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் படத்தில் தோன்றுவதாகவும் இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்தான் மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பதும், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ஷோபி மாஸ்டர் ஆகிய மூவரும் ‘மெர்சலுக்கு பின்னர் மீண்டும் சர்கார் படத்தில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் விஜய், வரலட்சுமி மற்றும் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல், சர்கார், விஜய், ரஹ்மான், ஷோபி மாஸ்டர்

‘Mersal’ magic combo to repeat in ‘Sarkar’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *