shadow

சர்கார் படத்தில் என்னென்ன மாற்றம்: புதிய தகவல்

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் திரையரங்குகளள முற்றுகையிட்ட நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து நேற்றிரவே ஒருசில காட்சிகளை நீக்கி, சில காட்சிகளின் வசனத்திற்கு மியூட் செய்யப்பட்டு மறுதணிக்கைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மறுதணிக்கைக்கு பின் திரையிடப்படும் ‘சர்கார்’ படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கோமளவல்லி என்பது மியூட் செய்யப்பட்டு விட்டதாகவும், தமிழக அரசு கொடுக்கும் இலவச பொருட்களை தீயில் போடும் காட்சி நீக்கப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்கார் படத்தில் புதிய காட்சிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை என்றும், * தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிற்கும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி என்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *