shadow

‘சர்கார்’ படத்தின் சிம்டாங்காரன் பாடல்: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘சர்கார்’ படத்தின் சிம்டாங்காரன் என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஜய் ரசிகர்கள் கேட்டு உற்சாகமாகி தங்கள் கருத்தினை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் ஒருசில ரசிகர்கள் மட்டும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் போல் இல்லை என அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் பிடித்துள்ளது என்பதே உண்மை

ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாம்ப பாக்யா, விபின் அனிஜா மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply