சமந்தாவுடன் மோத தயாராகும் த்ரிஷா

நடிகை சமந்தா நடித்த ‘சீமராஜா’, யூடர்ன் மற்றும் ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ ஆகிய மூன்று படங்கள் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு நடிகையின் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகுவது இதுதான் முதல்முறை

இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் அதே செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

டிராவல் போட்டோகிராபராக விஜய்சேதுபதியும், ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்து வரும் இந்த படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகிறார். மேலும் காளிவெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்கின்றார். ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்சேதுபதி, த்ரிஷா, சமந்தா, 96, சீமராஜா,

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *