சபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து நேற்று சபரிமலை நடை திறக்கப்பட்டதால் ஐயப்பனை வழிபட வந்த பெண்களை பெருமளவில் சபரிமலைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தனர்.

இந்த நிலையில் சபரிமலை பிரச்சினையால் மனம் வேதனையடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் என்பவர் நேற்று ரயில்முன் நின்று தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையால் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கம்யூனிஸ்ட் ஆட்சி தொடருமானால் இப்படி நரபலிகள் தொடரும். சபரிமலை பிரச்சினையால் குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *