shadow

சன் டிவியில் ’96’: அதிருப்தி தெரிவித்த த்ரிஷா

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

5வது வாரமே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் 80% ரசிகர்களுடன் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது அதிருதியை அளித்துள்ளதாக நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை தீபாவளி அன்று ஒளிபரப்புவதற்கு பதிலாக பொங்கல் தினத்தில் ஒளிபரப்பும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருப்பினும் இந்த படத்தை தீபாவளிக்கு ஒளிபரப்புவதில் சன் டிவி மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *