சன்னிலியோன் பெயரில் அசைவ உணவு: டெல்லி ஓட்டலின் புது ஐடியா

நடிகையின் பெயர்களை இதுவரை ஓட்டல்களுக்கு பெயர்களாக மட்டுமே வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு உணவின் பெயருக்கே கவர்ச்சி நடிகையின் பெயர் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பெயரை டெல்லியில் உள்ள உணவு விடுதியில் உணவுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலிஃபா சாப்ஸ் என அசைவ உணவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த உணவை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த உணவகத்தின் மெனு கார்டு சமூக வலைத்தளத்தில் பிரபலமான நிலையில், சிலர் பிரபலங்களின் தனி உரிமை, பதிப்புரிமை என எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களை வளைத்து போடு இப்படி செய்யப்படுவது சரியில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் உணவக நிர்வாகமோ இது எங்கள் கருத்து சுதந்திரம் என முடித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *