சந்திராயன் 2 வெற்றி: தலைவர்கள் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மதியம் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெங்கையா நாயுடு: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்

பிரதமர் மோடி: ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. நிலவு குறித்த கூடுதல் தகவல்களை இனி அறிந்துக்கொள்ள முடியும்

டிடிவி தினகரன்: சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையின் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிற ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

பொன்.ராதாகிருஷ்ணன்: சந்திரயான் – 2 விண்கலம் இந்திய விண்வெளித்துறையின் புதிய மைல் கல் ! இதுவரை எந்த உலக நாடுகளும் முயற்சி செய்யாத நிலவின் தென் துருவ பகுதியைஆய்வு செய்ய ‘இஸ்ரோ’ சந்திராயன் -2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது! இந்த சாதனையை நிகழ்த்த கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *