சத்தான டிபன் வெஜிடபிள் இட்லி உப்புமா

தேவையான பொருட்கள் :

நன்றாக வேகவைத்த மினி இட்லி – 15,
பச்சை மிளகாய் – 2,
நல்லெண்ணெய் – சிறிதளவு,
இஞ்சி – சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து – 30 கிராம்.

செய்முறை :

* கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

* கடைசியாக சிறு இட்லிகளை நன்றாக உதிர்த்து, மசாலாவுடன் சேர்த்துக் கிளறவும்.

* இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

* வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.

* சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *