shadow

சண்டக்கோழி 2′ ரிலீஸ் எப்போது?

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற்தை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்படுகிறது.

12ஆண்டுகள் கழித்து மீண்டும் முதல் பாகத்தில் இடம்பெற்ற விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லிங்குசாமி மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைகின்றனர். இவர்களோடு புதியதாக கீர்த்திசுரேஷும் நடிக்கின்றார்

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜைக்கு பின்னர் கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படம் வரும்பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply