சசிகுமார் படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு

சசிகுமார் நடித்த ‘கென்னடி கிளப்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்து, தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியாக இருப்பதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இன்று இந்த படத்தின் டிரைலரும் வெளிவரவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

சசிகுமார், பாரதிராஜா, காயத்ரி, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார், குருதேவின் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *