சசிகலா – சந்திரலேகா சந்திப்பு! ஆசிட் விஷயத்தை மறந்தாச்சா?

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவும், அவர் மீது ஒரு காலத்தில் ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவும் இன்று திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அதிமுகவை வலுப்படுத்த ஒரே வழி சசிகலாவை முன்னெடுத்து அதிமுகவை வழி நடத்துவதுதான் என்று முடிவு செய்த பாஜக இந்த பொறுப்பை சுப்பிரமணியன் சுவாமியிடம் கொடுத்துள்ளது. அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர்களுடன் சசிகலாவும் இணைய வேண்டும் என்பதுதான் சுப்பிரமணிய சுவாமியின் திட்டம்

இதற்காக அவர் தனது தூதுவராக சந்திரலேகாவை பெங்களூர் சிறைக்கு அனுப்பி வைத்ததாகவும் சசிகலா-சந்திரலேகா சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றதாகவும் இந்த சந்திப்பின்போது சசிகலா அதிமுகவின் தலைமையை ஏற்கவேண்டும் அவர் விரைவில் சிறையிலிருந்து வெளிவர பாஜக உதவி செய்யும் என்று கூறியதாகவும் தெரிகிறது

இந்த சந்திப்பின் போது சந்திரலேகா மூலம் தெரிவித்த திட்டத்திற்கு சசிகலா சம்மதித்து விட்டதாகவே தெரிகிறது. எனவே சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என்றும் முதல்வராகவும் துணை முதல்வராகவும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால்சசிகலா தலைமையிலான அதிமுக வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply