சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்

சசிகலாவை இதுவரை சந்திக்க முடியவில்லை என்றும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அமமுகவில் இருந்து என்னை இன்னும் நீக்கவில்லை என்றும், திமுகவுடனும், அதிமுகவுடனும் நான் இணையப்போவதில்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெளிவாக கூறியுள்ளார்.

நான் எங்கு தங்கினால் தினகரனுக்கு என்ன? தினகரன் தனியாக முடிவெடுக்கிறார் அதை கேட்டதால் கோபம் என கூறிய தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் யாரையும் ஒருமையில் பேசக் கூடாது என்றும், புதிய கட்சி தொடங்க வேண்டாம் என நான் தொடர்ந்து எதிர்த்தேன் என்றும் அவர் மேலும் தனது பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Reply