‘சங்கமித்ரா’ நாயகியாக நடிக்கும் தோனியின் காதலி

சுந்தர் சி இயக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியவுடன் அவர் இடத்தை நிரப்ப பல நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த கேரக்டரில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்டாலும், அவருடைய மார்க்கெட் தற்போது டல்லாக இருப்பதால் அவர் தேர்வு செய்யப்படவில்லை

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை திஷா பதானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’ என்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்து விபத்தில் மரணம் அடையும் கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

நாயகி உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாகவும், அதற்குள் ஒரு குறுகிய கால படமாக சுந்தர் சி, ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *