கோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி

திருச்சி முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இந்த நெரிசலில் காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அ|றிவித்துள்ளார்.

இன்று திருச்சி முத்தையம்பாளையத்தில் கோயில் விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசலில் ஒரு கும்பல் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த 7 பேர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 7 பேர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி என தமிழக அரசு அறிவித்துள்ளது

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *