shadow

பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது மதுரை கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது

ஜூன் 20ஆம் தேதிக்கு பின்னர் மதுரையில் மிகத் தீவிரமான கொரோனா பாதிப்பு இருந்தது தினமும் 400 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டது

தினமும் சுமார் 5000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால், கொரோனா சங்கிலி அறுபட்டு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது ]

கடந்த 45 நாட்களில் முதல் முறையாக பாதிப்பு 100க்கு கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே கொரோனாவில் இருந்து மதுரை கிட்டத்தட்ட மீண்டும் வருவதாகவும் விரைவில் முழு அளவில் மீண்டு விடும் என்றும் மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *