shadow

 மருத்துவமனையில் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து அதிர்ச்சியை அளித்து வருகிறது

இந்த நிலையில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று திடீரென தனது தனிமைப்படுத்தப்பட்ட அறையில்தான் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தற்கொலை செய்து கொண்ட நபர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *