கைலாஷ் யாத்திரையில் சிக்கியவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 625 பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்துள்ளது.

இதுவரை 2 விமானங்கள் மூலம் 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கித்தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *