shadow

கைரேகை மூலம் ஸ்டார்ட் ஆகும் மோட்டார்சைக்கிள்

ஸ்மார்ட்போன்களில் கைரேகை தொழில்நுட்பம் சகஜமான ஒன்றாகிவிட்ட நிலையில், விரைவில் இவை மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ஸ்மார்ட்போன்களில் கைரேகை தொழில்நுட்பம் சகஜமாகிவிட்டது. ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுத்தாமல் இருந்த நிலையில் வரும் காலங்களில் மோட்டார்சைக்கிள்களிலும் கைரேகை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

நெவான் பிராஜக்ட்ஸ் எனும் நிறுவனம் கண்டறிந்து இருக்கும் புதிய தொழில்நுட்பம் நமக்கு அதிகம் பிரபலமானதாகவே தோன்றுகிறது. மோட்டார்சைக்கிளில் பொருத்த வேண்டிய அவசியமற்ற இந்த அம்சம் சாவி இல்லாமல் மோட்டார்சைக்கிள்களை ஸ்டார்ட் செய்யும்.

கீலெஸ் அம்சத்தை இயக்க கைரேகையை ஸ்கேன் செய்தால் போதும். இதுமட்டுமின்றி ஆன்டி-தெஃப்ட் சிஸ்டம் மற்றும் ஆன்டி-டோவிங் தொழில்நுட்பம் வழங்கப்படுவதால் வாகனத்தை பாதுகாப்பானதாக்குகிறது. அந்த வகையில் விபரீதம் ஏற்பட்டால் உடனே பயனருக்கு தெரியப்படுத்தி விடும்.

புகைப்படம் நன்றி: நெவான் பிராஜக்ட்ஸ்

சந்தையில் வெளியிடப்படாத இந்த சாதனம், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு மட்டும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதனத்தை உருவாக்கி இருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சாதனத்தின் விலை ரூ.2,999 என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவரும் வாங்கக்கூடிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் இந்த சாதனம் மோட்டார்சைக்கிளில் வேலை செய்ய பயனர் தங்களது கையுறையை கழற்ற வேண்டும். மேலும் கை விரல்கள் ஈரமாக இருக்க கூடாது, இதனால் விரல்களை துடைத்த பின் பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஹேன்டிள் பாரினை தனியே லாக் செய்ய வேண்டும்.

மோட்டார்சைக்கிளில் உள்ள பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த சாதனம் கைவிரல் வைத்ததும், மோட்டார்சைக்கிள் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும். பேட்டரி தீர்ந்து போனால் இந்த சாதனம் எவ்வாறு வேலை செய்யும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

புதிய சாதனம் எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் தற்போதைய மோட்டார்சைக்கிள்களில் சில மாறுதல்களுடன் பொருத்த முடியும். இவ்வாறு செய்யும் போது மோட்டார்சைக்கிளின் வாரண்டி நிறைவுறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply