’கைதி’ படம் பார்த்த விஜய்: சூப்பராக இருந்ததால் அதிர்ச்சி

விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் 25-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் விஜய்யின் ’பிகில்’ படத்தை இதுவரை படக்குழுவினர்களை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை

ஆனால் ’கைதி’ திரைப்படத்தை ஒரு சில முக்கிய திரையுலக பிரமுகர்கள் பார்த்து விட்டதாகவும் படத்தில் கார்த்தியின் நடிப்பு மட்டும் ஆக்ஷன் காட்சிகளை பார்த்து அசந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தான் ’கைதி’ படத்தின் இயக்குனர் என்பதால் விஜய்க்கு ’கைதி’ திரைப்படத்தை திரையிட்டு காட்டியதாகவும் அந்த படத்தை பார்த்த விஜய்யின் அசந்து போய் விட்டதாகவும் கூறப்படுகிறது

அதே நேரத்தில் ’பிகில்’ படத்துக்கு போட்டியாக ’கைதி’ வருவதால் ’கைதி’ திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் உள்ளுக்குள்ள அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *