shadow

‘கே – 13’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகர் !

‘வம்சம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அருள்நிதி. இவர் தற்போது ‘கே-13’ என்னும் தலைப்பு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ‘கே-13’ படத்தின் மோஷன் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மோஷன் போஸ்டரை பார்க்கும் பொழுது இப்படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரத் நீலகண்டன் இயக்கும் இந்தா படத்தில் ஷாரதா ஸ்ரீநாத் இப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை பற்றிய டீஸர் , ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply