shadow

கேளாய் பெண்ணே: வலி நிவாரண மாத்திரைகள்

வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் கர்ப்பம் ஆவது தடைபடுமா?

கரு உருவாவதற்கு முன்பு ஏதேனும் உடல் பிரச்சினைகளுக்காக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் கர்ப்பப்பைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும்.

பிரசவத்துக்குப் பிறகு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. மாதவிடாய் தள்ளிப் போவதற்காகச் சிலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இது போன்ற மாத்திரைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வதால் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதனாலும் கர்ப்பம் அடைவது தடைபடும். இயற்கையான சுழற்சி முறையில் வரும் மாதவிடாயை மாத்திரைகள் மூலம் செயற்கையாக சில நாட்களுக்குத் தள்ளிவைப்பதால் ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் மாதவிடாய் வராமல் போவதுடன், கர்ப்பம் அடைவதும் தடைபடக்கூடும்.

Leave a Reply