shadow

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்” கேரள அரசு

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அமமாநில மக்கள் மீண்டு வர தமிழகம் செய்த உதவிகள் கணக்கில் அடங்காது.

ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துளனர்.

மேலும் கேரள அரசு தனது பிரமாண பத்திரத்தில் முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டதுதான் பாதிப்பிற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

முல்லைப் பெரியார் அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று: கேரள அரசு குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply