கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.5 வழங்கிய மீன் விற்ற கல்லூரி மாணவி

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு மீன் விற்றதால் நெட்டிசன்களால் கேலி செய்யப்பட்ட ஹெனன் என்ற கல்லூரி மாணவி தற்போது ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கேரளாவில் கல்லூரியில் பயிலும்மாணவி ஹனன், குடும்ப வறுமை காரணமாக மீன் விற்றுக் கொண்டு தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வந்ததார். இவர் பற்றி கட்டுரை மலையாள நாளிதழ் ஒன்றில் வெளியானது. கஷ்டத்துடன் போராடி குடும்பத்தை காப்பாற்றும் அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். சில சினிமா இயக்குனர்கள் அவருக்குவாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் ஹனன் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று அவரை கடுமையாக சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் கேரள முதல்வர் வரை சென்றது. அவர், ஹனனின் மன உறுதியை பாராட்டி கேரள அரசின் மகள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ஹனனை மோசமாக விமர்சித்தவ ர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஹனனுக்கு பலர் ஆதரவு கரம் நீட்டினர். அவருக்கு பண உதவியும் செய்தனர். இந்நிலையில் வரலாறு காணாத கனமழை. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, அம்மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து கேரளாவுக்கு பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு கிடைத்த நன்கொடை தொகையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார் மாணவி ஹனன்.

மக்களில் சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களிடம் பெற்ற நன்கொடையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ரூ.1.5 லட்சத்தை திருப்பி செலுத்துகிறேன். உடனடியாக நிவாரண நிதிக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய, ஃபோன் வேலை செய்யவில்லை. வங்கிக ளும் மூடப்பட்டுள்ளன. அதனால் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஹனன்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *