கேரள நிதியுதவி: ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் பலத்த சேதம் அடைந்ததால் அம்மாநில மக்கள் பெருந்திண்டாட்டத்தில் உள்ளனர். குறிப்பாக குடிதண்ணீர், உணவு, பால் ஆகியவை கூட வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கேரளாவுக்கு தமிழ் திரையுலகினர் தாராளமாக நிதியை வழங்கி வருகின்றனர். கார்த்தி-சூர்யா ரூ25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் கொடுத்துள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர்

ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *