கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்தாரா சன்னிலியோன்

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் சேதத்திற்கு உள்ளாகிய கேரள மாநிலத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும் நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ரூ.5 கோடி நிதியுதவி செய்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து சன்ன்லியோன் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ செய்தியும் வெளிவரவில்லை என்பதால் இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று புரியவில்லை

சன்னிலியோன் ரூ.5 கோடி கொடுத்தது உண்மைதான் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் சன்னிலியோனிடம் இருந்து வெளிவரும் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *