கேரளாவிற்கு அள்ளி கொடுத்தவர்கள் டெல்டாவிற்கு கிள்ளிகூட கொடுக்காதது ஏன்?

சமீபத்தில் கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ் திரையுலகினர் கேரள வெள்ள நிவாரண நிதியாக அம்மாநில முதல்வரிடம் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் அள்ளி அள்ளி கொடுத்தனர்.

ரஜினி, கமல், விஜய், ராகவா லாரன்ஸ், போன்றோர் கேரள வெள்ள நிவாரண நிதியாக லட்சங்களில் கொடுத்த நிலையில் அதே அளவுக்கு பெரும் பாதிப்பு அடைந்த தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு இதுவரை நிவாரண நிதி என ஒரு பைசா கூட அறிவிக்கவில்லை.

இதுவரை சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் வழங்கியுள்ளனர். எனவே ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் பெரிய தொகையை நிவாரண நிதியாக கொடுத்தால் டெல்டா பகுதி மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *