கேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது: ஏன் தெரியுமா?

பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல. சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.

பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.

பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.

Leave a Reply