கூட்டணி இல்லை என்பதை சூசகமாக தெரிவித்த அதிமுக!

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக-காங்கிரஸ் கூட்டணி தயார் நிலையில் உள்ளது. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தமாக போன்ற கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்த எந்த தகவலும் இல்லை. பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணணயும் என்று கருதப்பட்டாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட விரும்புவோார் வருகின்ற பிப்ரவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 40 தொகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடபோவதை சூசகமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *